உலர்த்திய தேங்காய், கொப்பரா, எண்ணெய் தயாரிப்பு பிரிவு, அரைவாசி கொழுப்பு நீக்கி கட்டிப்படுத்தப்பட்ட தேங்காய், தேங்காய்ப்பால், தேங்காய் கிறீம் போன்ற தேங்காய்சதை உற்பத்தி தயாரிப்பு அலகு, நார் மற்றும் நார் உற்பத்தி தயாரிப்பு அலகு, சிரட்டைக் கரி, சிரட்டைகளை மீள் சுழற்சி செய்த காபன் உள்ளிட்ட சிரட்டை உற்பத்தி தயாரிப்பு அலகு ஆகியவற்றைக் கொண்ட தெங்கு தயாரிப்பு அலகுக்கும் அதைத் தவிர சிறு பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறிய அளவிலான தொழிற்சாலைகள் பலவற்றுக்கும் நவீனமயப்படுத்துவதற்காகவும் வினைத்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான உதவி போன்ற அபிவிருத்தி வசதிகள் வழங்கப்படுகிறது.

  • தெங்கு உற்பத்தி தயாரிப்பை மேம்படுத்துதல் மற்றும் ஒழங்குபடுத்துதல்
    • தயாரிப்பு அலகுகளை வருடாந்தம் பதிவு செய்தல், கண்காணித்தல்
    • தெங்கு உற்பத்திகளில் நுண்ணுயிர் மற்றும் பௌதிக தரத்தை சான்றுப்படுத்துதல்
  • தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்குவதன்மூலம், நடைமுறையிலுள்ள பாரம்பரிய செயற்பாடுகளுக்குப் பதிலாக பொருத்தமான நவீன தயாரிப்பு தொழில்நுட்ப முறைகளை அடையாளம் காணுதல் மற்றம் மேம்படுத்துதல்.
  • தெங்கு சார்ந்த கைத்தொழில்களுக்கான நவீனமய வேலைத்திட்டங்களைத் திட்டமிடல் மற்றும் செயற்படுத்துதல்
    • உலர்த்திய தெங்கு கைத்தொழில்
      • சுகாதார நிலையை மேம்படுத்துதல்
      • தரத்தை மேம்படுத்துதல்
      • தயாரிப்பு வசதிகளை மேம்படுத்தல்
      • உற்பத்தி செலவுகளைக் குறைத்தல் - சிரட்டை நெருப்பில் இயக்குகின்ற கொதிகலன், ஜீவ எரிவாயு சக்தி கொதிகலன் போன்ற சக்தியிலிருந்து வினைத்திறன்மிக்க முன்வைத்தல்.
      • சூழல் நேயம் கொண்ட உபகரணங்களை முன்வைத்தல்
      • உலோக உபகரணங்களை முன்வைத்தல்
    • தேங்காய் எண்ணெய் கைத்தொழில்
      • தேங்காய் எண்ணெய்யுடன் ஏனைய காய்கறி எண்ணெய்களைக் கலந்து விற்பனை செய்வதைத் தடுத்தல்
      • சுத்தமான தேங்காய் எண்ணெய் உற்பத்தியை மேம்படுத்துதல்
      • உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் கைத்தொழிலுக்குப் புதிதாக வருகின்றவர்களை ஊக்குவிப்பதற்கும் நிதி உதவிகளை வழங்குதல்
      • உயர் தரத்திலான, சாப்பாட்டுக்குத் தகுந்த தரத்திலான தேங்காய் எண்ணெயை எண்ணெய் ஆலைகளிலேயே அடுக்கி வைக்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தல்
    • தும்பு நார்
      • தொழிற்சாலையை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்குதல்
      • தேங்காய் நார் தொடர்பான முறைசாரா பிரிவை முன்னேற்றுதல், உதாரணமாக நார் உரிக்கும் இயந்திரம், தரை விரிப்பு தயாரிக்கும் பலகை மற்றும் தும்பு நார்களை விநியோகித்தல்
      • பூர்த்தி செய்யப்பட்ட நார் பொருட்கள் மற்றும் முறைசாரா பிரிவை வலுப்படுத்துதல் என்பவற்றின் மூலம் தும்புநார் உற்பத்தியை மேம்படுத்துதல்
    • கொப்பரா
      • நல்ல நிலையில் உள்ள கொப்பராக்களைத் தயாரித்தல் மற்றம் பாரம்பரிய தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்
      • கொப்பரா சூளைகளையும் கொப்பரா உலர்த்திகளையும் விநியோகித்தல்
      • தேங்காய் சதை சாப்பிடுவதற்குப் பொருத்தமான வெள்ளைக் கொப்பராக்களாகத் தயாரிப்பதற்கு தற்பொழுது இருப்பதைவிட மிகப் பொருத்தமான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல்
    • தேங்காய் சாறு தயாரித்தல்
      • முற்றிய தேங்காய் தண்ணீரைத் தயாரிப்பதற்குப் பொருத்தமான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல்
  • தெங்கு உற்பத்திகளைத் தயாரிப்பதற்கும் பரிசோதனைக்கான தயாரிப்பு உபகரணங்களை உருவாக்குவதற்கும் முன்னோடி இயந்திரகூடங்களை அமைத்தல் மற்றும் நடாத்துதல்.
    • அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் இயந்திரகூடங்களை அமைத்தல்
    • உள்நாட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி ஊற வைத்த தென்னம் மட்டைகளிலும் பச்சை தென்னம்மட்டைகளிலும் தும்பு நார்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரமொன்றை உருவாக்குதல்.
  • ஏற்றுமதிக்காக பெறுமதி கூட்டப்பட்ட உற்பத்திகளை மேம்படுத்துதல்
    • தேங்காய்ப் பால் சார்ந்த புதிய உற்பத்திகளை உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்துதல்.
    • தேங்காய் கிறீம் மற்றும் ஏனைய பெறுமதி கூட்டப்பட்ட புதிய உற்பத்திகளை மேம்படுத்துதல்.
    • சிரட்டைக் கரியிலிருந்து பெறுமதி கூட்டப்பட்ட புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்துதல்.
    • நார் கைத்தொழிலில் பெறுமதி கூடுவதை மேம்படுத்துதல்.
  • அக்கறை காட்டுகின்றவர்களுக்கான பயிற்சியளிக்கும் மற்றும் அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள்
    • உலரவைத்த தேங்காய்கள்
      • உலரவைத்த தேங்காய் ஆலைகளுக்காக HACCP ஆயலோசனைக் கோப்பைத் தயாரித்தல் மற்றம் HACCP தர முறைமையை செயற்படுத்துவது தொடர்பாக அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள்.
    • தேங்காய் நார்
      • பெறுமதி கூட்டப்பட்ட தும்பு நார் மற்றும் தரை விரிப்பு உற்பத்தி தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
      • பூர்த்தி செய்யப்பட்ட தும்புப் பொருட்கள் மற்றும் உற்பத்தி தயாரிப்பு கைத்தொழில், நலனோம்பல் / தரைவிரிப்பு, ஜீவ துணிவகைகள், ரபர் கலந்த தும்பு, தென்னம் பூ சீவுதல் மற்றும் அலங்கார பொருட்கள் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
    • தேங்காய் எண்ணெய்
      • நுகர்வோருக்காக உயர் தரத்திலான தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொடர்பான ஆலோசனைகளை எண்ணெய் ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறிப்பாக தேங்காய் எண்ணெய்யில் தரம் குறைந்த பாம் எண்ணெய் கலக்கப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
      • பாடசாலையை விட்டுச் சென்றவர்களுக்காக தேங்காய் எண்ணெய் மற்றும் தெங்கு சார்ந்த கைத்தொழில் தொடர்பாக ஆறுமாத முழுநேர பயிற்சிநெறியொன்றை தொழில்நுட்ப கல்லூரியில் நடாத்துதல்.
  • சுதந்திர வர்த்தகத்தின் கீழ் ஏற்றுமதி பிரிவின்மீது விசேட கவனம் செலுத்தி தயாரிப்பு பணிகளை மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் கொள்கைகளைத் தயாரித்தல் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்களை இவ்வதிகாரசபை இலக்காகக் கொண்டுள்ளது.
  • தெங்கு தயாரிப்புகளை உற்பத்தி செய்கின்ற ஆலை உரிமையாளர்களையும் உற்பத்தியாளர்களையம் பதிவு செய்தல் மற்றும் அத்தகைய பதிவுக்காக தரம், நியமங்கள், நிபந்தனைகள், நடவடிக்கைமுறைகள், செலுத்த வேண்டிய வருடாந்த கட்டணம், ஏதேனும் ஒரு பெயரை பதிவிலிருந்து நீக்குதல், மீண்டும் சேர்த்துக்கொள்தல் போன்ற விடயங்களைத் தீர்மானித்தல்
  • தெங்கு உற்பத்திகளைத் தயாரித்தல், அடுக்குதல் அல்லது களஞ்சியப்படுத்துதல் என்பவற்றிற்காகப் பயன்படுத்தப்படுகின்ற அல்லது பயன்படுத்தப்படவிருக்கின்ற தொழிற்சாலைகள், களஞ்சியங்கள், மேடைகள், கட்டிடங்கள், வளாகம், உகரணங்கள், இயந்திரங்கள் கருவிகள் ஆகியவற்றை பரிசோதித்தல், கண்காணித்தல், ஒழுங்குபடுத்தல், கட்டுப்படுத்தல்.
  • HACCP மற்றும் ISO போன்ற தர முறைமைகளை செயற்படுத்துதல் மற்றும் பெற்றுக்கொள்தல் தொடர்பாக தெங்கு உற்பத்தியாளர்களுக்கு உதவுதல்.
    • உலர் தேங்காய் ஆலை உரிமையாளர்களுக்காக இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இத்தர முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கின்றவர்களுக்காக அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டுள்ளன.
  • நிதியுதவி திட்டங்களைத் திட்டமிடுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல். தயாரிப்பு கைத்தொழில்களை மேம்படுத்துவதற்காகவும் உற்பத்தி செலவுகளைக் குறைப்பதற்காகவும். உற்பத்திகளின் தரத்தை உயர்த்துவதற்காகவும் செஸ் நிதியத்திலிருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது.
    • உலர் தெங்கு ஆலைகளுக்காக வங்கிக் கடன்.
    • இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட தெங்கு உற்பத்திகளுக்காக மேலதிகமாகச் செலுத்தப்பட்டிருக்கும் செஸ் வரிகளை மீளச் செலுத்துதல்.
  • உற்பத்தி பணிகள் நடைபெறாத காலப்பகுதியில் ஊழியர்களுக்காச் செலுத்தப்படுகின்ற நிவாரண சம்பளங்களை மீள்நிதி ஈடு செய்தல்.
  • உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளவாறு தெங்கு உற்பத்திக்காக ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு தரங்களைத் தயாரித்தல்.
    • தேங்காய் கிறீம் வெளியில் தயாரிப்பதற்காக தர விவரக்கூற்றுகளைத் தயாரித்தல்.
    • குறைந்த கொழுப்புடைய உலர் தேங்காய் உற்பத்திக்காக தர விவரக்கூற்றுகளைத் தயாரித்தல்.
    • தும்பு நாருக்காக தர விவரக்கூற்றுகளைத் தயாரித்தல்.
  • சுழற்சி செய்யப்பட்ட காபன் மற்றும் பெறுமதி கூட்டப்பட்ட சுழற்சி காபன் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி தொடர்பான பணிகளை ஆய்வு செய்தல் மற்றும் அக்கைத்தொழிலில் சிரட்டை கரி சேகரிப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

தொடர்பு விபரங்கள்

தொலைபேசி : +94 113 288 495
+94 112 502 502 - 4 (மாதிரி அலகு, நாரஹேன்பிட்ட)
தொலைநகல் :  
மின்னஞ்சல் : info.pd.cda[at]gmail.com