இலங்கையிலும் வெளிநாட்டிலும் தெங்கு உற்பத்திக்கான கேள்வியைப் பேணுதல், மேம்படுத்துதல் மற்றும் தோற்றுவித்தல்.

உள்ளூர் ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் தெங்கு மற்றும் தெங்கு உற்பத்திகளை சந்தைப்படுத்துதலை மேம்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தல் வர்த்தகத்திலும், ஏற்றுமதி வர்த்தகத்திலும் ஈடுபட்டிருக்கின்ற நிறுவனங்களுக்கு, உற்பத்திகளை சந்தைப்படுத்தும் பல்துறை தொடர்பாக தமது இலக்குகள் முதன்மையாகக் கொள்வதற்கு வசதிகள் செய்து கொடுத்தல், உதவுதல்.

  • சந்தை தகவல் சேவை
    • தெங்கு உற்பத்தி தொடர்பாக இந்நாட்டுக்கு ஏற்புடையதானதும் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்புடையதானதுமான தகவல்களை வழங்குதல்.
    • பெற்றுக் கொள்ளக்கூடிய ஏற்றுமதி சந்தைகள், ஏற்றுமதி விலை, இந்நாட்டு சந்தை விலைகள், தெங்கு உற்பத்தி தொடர்பாக சந்தைகளின் நெகிழ்வுத்தன்மை, பொதிப்படுத்தல் விபரங்கள், போக்குவரத்து கட்டணங்கள், மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்குதல்.
    • காய்கறி எண்ணெய்கள் மற்றும் தெங்கு உற்பத்திகள் என்பவற்றின் சர்வதேச விலை விபரங்களை வழங்குதல்.
    • தெங்கு உற்பத்திகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி செய்தல் என்பவை சம்பந்தமான போட்டியாளர்களைப்பற்றிய தகவல்களை வழங்குதல்
    • தெங்கை அடிப்படையாகக் கொண்ட இணையத்தளத்தைக் காலத்திருத்தம் செய்து நடாத்துதல்
    • தெங்கு கைத்தொழில் மற்றும் வர்த்தகம் தகவல்கள் / ஏல விற்பனை நிலையங்களை நடாத்துதல்.
    • தெ.அ.அதிகாரசபையில் பதிவு செய்து கொண்டுள்ள ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், தரகர்கள், தோட்டங்கள், வியாபாரிகள் போன்ற தகவல்களை வழங்குதல்
  • சந்தைபற்றிய ஆராய்ச்சியும் ஆய்வும்.
    • வருடாந்த தெங்கு உற்பத்தியை முன்கூட்டியே அறிவித்தல்
    • தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் தொடர்பான தனிநபர் நுகர்
    • தெங்கு உற்பத்திகளின் உற்பத்தி செலவுகளைப் பகுப்பாய்வு செய்தல்
    • இறக்குமதி செய்யப்படுகின்ற காய்கறி எண்ணெய் நுகர்வு தொடர்பான பகுப்பாய்வு.
  • வர்த்தக வசதிகள் சேவை
    • கொழும்பில் புதிய தெங்கு ஏலத்தையும் கொப்பரா ஏலத்தையும் நடாத்துதல்
    • தெங்கு முக்கோணத்திலும் சிறு தெங்கு முக்கோணத்திலும் பிரதேசரீதியாக தேங்காய் ஏலவிற்பனையை நடாத்துதல்.
    • வியாபாரம் சம்பந்தப்பட்ட பிணக்குகள்/கேள்விகள் தொடர்பாக செயற்படுதல் (ஏற்றுமதியாளர்கள், ஆலை உரிமையாளர்கள், தரகர்கள், வியாபாரிகள், பயிர்ச்செய்கையாளர்களுக்கிடையில் உள்நாட்டு, வெளிநாட்டு கேள்விகளைத் தீர்ப்பதற்காக நடுத்தீர்ப்புகளை நடாத்துதல்
    • ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள், தரகர்கள் ஆகியோரையும் தெங்கு உற்பத்தியையும் தோட்டங்களையும் பதிவு செய்தல்.
    • தெங்கு உற்பத்திகளை வகைப்படுத்தும்போது ஏற்றுமதியாளர்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்களைத் தீர்த்தல், பெறுமதி சேர்த்து மீண்டும் ஏற்றுமதி செய்வதற்காக தெங்கு உற்பத்தி மூலப்பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குதல் மற்றும் அவற்றை ஆய்வு செய்தல்.
  • சந்தை மேம்பாட்டு சேவை
    • வெளிநாட்டு வர்த்தக கண்காட்சிகளில் கலந்துகொள்தல் மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைப்புகளுடன் வர்த்தக கலந்துரையாடல்களை நடத்துதல்.
    • வெளிநாட்டு தூதரகங்களில் தெங்கு மற்றும் தெங்கு சார்ந்த உற்பத்திகளை காட்சிப்படுத்துகின்ற காட்சி அலுமாரிகளில் காட்சிப்படுத்தல்.
    • பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கிடையில் வர்த்தக விசாரணைகளை விநியோகித்தல்.
    • வர்த்தக கலந்துரையாடல்களை நடத்துதல். (விற்பனையாளர் - கொள்வனவாளர் கூட்டங்களுக்கு வசதிகள் செய்து கொடுப்பதன் மூலம்) வர்த்தக தொடர்புகளைக் கட்டியெழுப்புதல்.
  • ஏற்றுமதி பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருக்கின்றவர்களுக்காக தெங்கு மற்றும் தெங்கு சார்ந்த உற்பத்திகள் தொடர்பான ஆலோசனை சேவைகளை / சந்தை உதவி சேவைகளை வழங்குதல்.
  • தெங்கு சார்ந்த புதிய கருத்திட்டங்களை மதிப்பிடல் மற்றும் பரிந்துரை செய்தல்.
  • தெங்கு சார்ந்த புதிய தொழில்முயற்சிகளையும் தொழில்முயற்சியாளர்களையும் உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்.
  • தீர்வை கட்டணங்களுள்ள மற்றும் தீர்வை கட்டணங்கள் இல்லாத பண்டங்கள் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துதல்.
    • இருதரப்பு மற்றும் பல்தரப்பு வர்த்தக கலந்துரையாடல்களில் கலந்துகொள்தல்.
    • சுதந்திர வர்த்தக கலந்துரையாடல்கள் போன்றவை.
  • அக்கறை காட்டுகின்றவர்களுக்கு தெங்கு கைத்தொழில் சம்பந்தப்பட்ட தகவல்களை துண்டுப் பிரசுரங்கள் மூலம் விநியோகித்தல்.

தொடர்பு விபரங்கள்

தொலைபேசி : +94 112 322 802
தொலைநகல் : +94 112 322 803
மின்னஞ்சல் : cdamdr04[at]gmail.com