தொலை நோக்கு

“தெங்கு கைத்தொழில் மரப்பயிர் பிரிவிலிருந்து மொத்த தேசிய உற்பத்திக்கு உயர் பங்களிப்பு வழங்குகின்றதாகவும் உற்பத்தி - சந்தை பல்வகைத்தன்மை தொடர்பில் உலகத் தலைவராகவும் இருத்தல்”

செயற்பணி

“உள்ளூர் நுகர்வுக்கும் கைத்தொழில்களுக்கும் தெங்கு மற்றும் தெங்கு உற்பத்திகளை வழங்குவதைப் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டு வர்த்தக செயலூக்கம் மற்றும் நிலைபேறானதன்மை என்பவற்றின் பொருட்டு தெங்கு கைத்தொழிலுக்கு வசதிகளை வழங்குவது மற்றும் தேசிய பொருளாதாரத்துக்கு உயர் பங்களிப்பை வழங்குதல்”

1971ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை சட்டம், பின்னர் 1987ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க திருத்தச் சட்டம், 1978.12.31 ஆம் திகதியிட்ட 69/4 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் ஆகிய இவற்றின் பிரகாரம் தெங்கு கைத்தொழிலின் முதன்மை நிறுவனமாக செயலாற்றுவதற்கு தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்கு அதிகாரங்களும் கடமைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் அது தெ.அ.அ. சபையிலும் இக்கைத்தொழிலில் இணைந்திருக்கின்ற ஏனைய இணை குழுக்களிலும் நல்லாட்சி, வழிகாட்டல், தொழில்நுட்பம், கருத்திட்டங்களையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் அங்கீகரித்தல், நிதியங்களை முகாமைப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.

மேலும் அதற்குள்ள அதிகரங்களுக்கடையே சிறிய, மத்திய மற்றும் மாபெரும் கைத்தொழில்களில் நேரடி தொழிற்பாட்டு நடவடிக்கைகள், கண்காணிப்பு பொறுப்புகள், தொழில்நுட்ப செயற்பாடுகளை அபிவிருத்திச் செய்து அவற்றிற்கு வசதிகளை வழங்குதல் என்பனவும் அடங்குகின்றன. இவற்றைவிட, தெ.அ.அ. சபையின் சந்தைப்படுத்தல் கடமைகள் தனித்துவமானதாக இருக்கின்ற அதே நேரத்தில் அவை இந்நாட்டிலும் சர்வதேச சந்தைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவ்வதிகாரங்களின் மத்தியில் தெ.அ.அ. தேங்காய்களிலிருந்து உற்பத்திகளைச் செய்வதற்கு உதவிகளை வழங்கி அவற்றிற்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கிறது. இக்குறிக்கோள்களை அடைவதற்காக தெ.அ.அ. இப்பணிகளில் அக்கறை காட்டுகின்றவர்கள் உட்பட அரச நிறுவனங்கள், தனியார்துறை அமைப்புகள், பயிர்ச்செய்கையாளர்கள், கைத்தொழிலாளர்கள், வங்கிகள், பொதுமக்கள் போன்ற நிறுவனங்களையும் ஆட்களையும் இணைக்கிறது.

பிரதான தொழிற்பாடுகள்

தெங்கு அபிவிருத்திச் சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளவாறு அதகாரசபையின் தொழிற்பாடுகள் விரிவாக கீழே காட்டப்பட்டுள்ளன:

  • தெங்கு கைத்தொழில் தொடர்பாகவும் தெங்குப் பயிர்ச் செய்கைகளிலும் அவற்றிற்கான கொள்கைகளைத் தயாரித்தல் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகளைத் தீர்மானித்தல் என்பவை தொடர்பாக அமைச்சருக்கு உதவுதல்.
  • அவ்வாறு தீர்மானிக்கப்படுகின்ற அபிவிருத்தி முன்னுரிமைகளின் பிரகாரம் கருத்திட்டங்களையும் திட்டங்களையும் தயாரித்தல் அல்லது தயாரிப்பதற்கு உதவுதல்.
  • அவ்வாறு தயாரிக்கப்படுகின்ற கருத்திட்டங்களையும் திட்டங்களையும் செயற்படுத்துதல் அல்லது செயற்படுத்துவதற்கு உதவுதல்.
  • தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் அமைச்சரால் அமைக்கப்படுகின்ற சபையின் பணிகளை தொடர்புபடுத்துதல்.

தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் 20வது உறுப்புரையில் காட்டப்பட்டுள்ளவகையில் தெ.அ.அ.யின் குறியிலக்கு, வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளையின் மூலம் அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேநேரத்தில், தொழில்நுட்ப செயற்பாடுகள், தெங்கு மற்றும் தெங்கு உற்பத்திகளை இந்நாட்டு சந்தைக்கும் ஏற்றுமதி சந்தைக்கும் அனுப்புதல் போன்றவை தொடர்பில் அனைத்து பணிகளையும் கண்காணிக்கும் பொறுப்பும் அபிவிருத்திச் செய்யும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  • தெங்குப் பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் உற்பத்தி செய்வதற்கு உதவுதல், மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்
  • தெங்கு உற்பத்தியில் புதிய நுணுக்க முறை ஆக்கமுயற்சிகள்.
  • தெங்குப் பொருட்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக உதவுதல், நவீனமயப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் அதற்கு ஆலோசனை வழங்குதல்
  • இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற மற்றும் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற தெங்குப் பொருட்களின் தரம் தொடர்பான தரக்கட்டளையை தீர்மானித்தல் மற்றும் அவற்றைப் பேணுதல்.
  • தெங்கு உற்பத்திகளைக் கொள்வனவு செய்தல் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் கொள்வனவு செய்வதையும் சந்தைப்படுத்துவதையும் ஒழுங்குபடுத்துதல், பொதுவாக தெங்கு உற்பத்திக்காகவும் தெங்கு உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்ற சிறு தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்காகவும் குறைந்தபட்ச மற்றும் கூடியபட்ச விலை முறையொன்றையும் விலையை நிலையாக வைத்திருக்கும் திட்டங்களையும் தயாரித்தல் அல்லது நடைமுறைப்படுத்துதல்
  • தெங்கு உற்பத்திகளின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் அவற்றைப்போன்று ஏற்றுமதி விலைகளையும் இறக்குமதி விலைகளையும் ஒழுங்குபடுத்துதல்.
  • மேம்பாட்டு பணிகளை விளம்பரம் செய்தல், ஆரம்பித்தல், நிதி வழங்குதல், உதவி வழங்குதல், கண்காணித்தல் என்பவற்றின் மூலம் இலங்கையிலும் அதற்கு வெளியிலும் தெங்கு உற்பத்திக்கான கேள்வியைப் பேணுதல், மேம்படுத்துதல், உருவாக்குதல், விற்பனைக் கூடங்களையும் முகவர் வர்த்தக நிலையங்களையும் அமைத்தல், முகாமைப்படுத்தல், கண்காணித்தல் என்பவற்றின் மூலமும், கண்காட்சி கூடங்களையும் விற்பனைக் கூடங்களையும் ஒழுங்குசெய்வதன் மூலம் அவற்றிற்கு உதவுவதன் மூலமும், கலந்து கொள்வதன் மூலமும், தேவைப்படும் ஏனைய செயல்முறைகளின் மூலமும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்தல்.
  • இலங்கையிலும் அதற்கு வெளியிலும் தெங்கு உற்பத்திகளை கொண்டு செல்வதற்கு சந்தைப்படுத்துவதற்கு உரிய அனைத்து பிரிவுகள் தொடர்பில் சந்தைகளை ஆய்வு செய்தல்.
  • தெங்கு பயிர் செய்தல் மற்றும் தெங்கு உற்பத்திகளைத் தயாரிக்கின்ற அல்லது விற்பனை செய்கின்ற நிறுவனங்களின் முகாமைத்துவம் மற்றும் உரிமை தொடர்பாக கூட்டுறவு மற்றும் கூட்டுமுறைகளை மேம்படுத்துதல்.

1980 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தெங்கு வர்த்தகம் தாராளமாயமாக வந்தது முதல் அதிகாரசபையின் பிரதான கடமைகள், ஏற்றுமதி பிரிவில் விசேட கவனம் செலுத்தும் வகையில் பரிசீலனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவை மேம்படுத்தல், அபிவிருத்தி செய்வதற்கான கொள்கைகளையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றுதல், மற்றும் செயற்படுத்துதல் என்பவற்றை இலக்காகக் கொண்டிருந்தன.

தெங்கு கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதோடு தொடர்புடைய கொள்கைரீதியான விடயங்களைத் தீர்மானிப்பதற்கு தெங்கு அபிவிருத்தி அமைச்சுக்கு உதவும் பொருட்டு தெ.அ.அ. அமைச்சுடன் நெருங்கிய தொடர்புடன் செயலாற்றியது. அவ்விடயங்கள் பின்வருமாறு அமைகிறது.

  • தெங்கு கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் முன்னுரிமைகளை அடையாளம் காணுதல் அதாவது தெங்கு ஆராய்ச்சி, தெங்கு பயிரிடல், பரிசீலனை செய்தல், தேங்காய் மற்றும் தெங்கு உற்பத்திகளை சந்தைப்படுத்தல்.
  • முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்ட முன்மாதிரியின்மீது தெங்கு கைத்தொழிலின் அனைத்து அபிவிருத்தி கருத்திடடங்களுக்குமான செஸ் நிதியங்களை ஒதுக்கிக் கொடுத்தல்.
  • தேங்காயை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளையும் காய்கறி எண்ணெய் போன்ற பதிலீடுகளுக்காக இறக்குமதி தீர்வைகளை விதித்தல்.
  • இந்நாட்டில் நுகர்வதற்கும் கைத்தொழில் நடைமுறைகளுக்கும் தெங்கு மற்றும் தெங்கு சார்ந்த உற்பத்திகள் தொடர்பான கேள்விகள், வழங்கல்கள், விலை விபரங்கள் என்பவற்றை முகாமைப்படுத்தல்.

பிரதான நடவடிக்கைகள்

  • உரிய தரத்தைப் பேணுவதற்காக பதப்படுத்தல் பிரிவுகள், தொங்கு உற்பத்தி மாதிரிகளை பரிசீலித்தல்
  • உரிய தரத்தைப் பேணுவதற்காக ஏற்றுமதி தொகைகளிலிருந்து பெறப்பட்ட தெங்கு உற்பத்தி மாதிரிகளைப் பரிசோதித்தல்
  • ஏற்றுமதிப் பண்டங்களுக்கான தரச்சான்றிதழ்களை வழங்குதல்
  • தெங்கு உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப நிதி உதவிகளை வழங்குதல்.
  • நாட்படுத்தப்பட்டதும் நவீனமயப்படுத்தப்பட்டதுமாக தொழிற்சாலைகளை நடத்துவதற்குத் தேவையான தொழில்சார் உதவிகளையும் நிதி உதவிகளையும் வழங்குதல்
  • பெறுமதி கூடிய தெங்கு உற்பத்திகளைத் தயாரிப்பதற்காக தொழில்சார் உதவிகளையும் நிதி உதவிகளையும் வழங்குதல்
  • தெங்கு மற்றும் தெங்கு சார்ந்த உற்பத்திகள் தொடர்பான புதிய சந்தை விபரங்களை வர்த்தக மற்றும் தொழிற்சாலை பிரிவுக்கு வழங்குதல்.
  • தேங்காய் மற்றும் கொப்பராவுக்காக ஏலவிற்பனைகளை நடத்துவதன் மூலம் உள்ளக மற்றும் ஏற்றுமதி சந்தை நிறுவனங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • விற்பனைகள், கண்காட்சிகள் போன்றவற்றில் கலந்து கொள்வதன் மூலம் தெங்கு உற்பத்தி ஏற்றுமதியை மேம்படுத்துதல்.
  • சுழற்சி செய்யப்பட்ட காபன் மற்றும் பெறுமதி கூட்டப்பட்ட சுழற்சி செய்யப்பட்ட காபன் கைத்தொழில் தொடர்பான பணிகளை செய்தல்.

எமது இலக்குகள்

  • மொத்த தேசிய உற்பத்திக்கு குறைந்தபட்சம் 4% பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் பெறுமதி கூட்டப்பட்ட ஒரு தொகை பொருட்களை முதன்மையாகக் கொள்தல்.
  • உலக சந்தையை அணுகி உயர் தரத்திலான உற்பத்திகளைக் கொண்ட உற்பத்தி சந்தை தொடர்பான பலவகைத் தன்மையை அடைதல்
  • தெங்கு உற்பத்தி ஏற்றுமதிகளிலிருந்து வருடாந்த அந்நிய செலாவணியை அதிகரித்துக் கொள்தல்
  • தெங்கு சார்ந்த உற்பத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பயிர்ச் செய்கையாளர்களுக்கும் தொழில்நுட்பவியலாளர்களுக்கும் தமது முதலீடுகளுக்காக நிலையான இலாபம் கிடைப்பதை உறுதி செய்து கொள்தல்.

எமது நோக்கங்கள்

  • தெங்கு கைத்தொழில் தொடர்பான கொள்கைகளைத் தயாரிப்பது தொடர்பாகவும் அபிவிருத்தி முன்னுரிமைகளைத் தீர்மானிப்பது தொடர்பாகவும் அமைச்சருக்கும் அமைச்சுக்கும் உதவுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல்.
  • நீண்டகால ரீதியில் வர்த்தகத்தை செயலூக்கமுள்ளதாகவும் நிலையானதாகவும் மேற்கொள்ளும்பொருட்டு தெங்கு கைத்தொழிலை அபிவிருத்தி செய்தல்.
  • தேங்காயையும் தேங்காய் எண்ணெயையும் நியாயமான விலையில் வீட்டுத் தேவைகளுக்காக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்தல்.
  • வீட்டு நுகர்வுகளின்போது ஏற்படும் விரயத்தைத் குறைத்துக் கொள்வதன்மூலம் தொழில்நுட்ப பரிசோதனைக்குப் பெற்றுக்கொள்ளக்கூடிய தேங்காய்களின் அளவை அதிகரித்துக்கொள்தல்
  • தெங்குப் பொருட்களை உற்பத்தி செய்கின்றபோதும் ஏற்றுமதி செய்கின்றபோதும் ஆகக்கூடிய உற்பத்தி சந்தைப்படுத்தல் பல்வகைத்தன்மையொன்றை அணுகுதல்.
  • தெங்கு உற்பத்தி ஏற்றுமதியிலிருந்து ஆகக்கூடிய அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொள்தல்.

எமது திறமுறைகள்

  • விவசாயிகளுக்கு தேங்காய்களுக்கு போதியளவு விலைகள் கிடைக்கின்றன என்பதையும் கைத்தொழில்துறைக்கும் நுகர்வோருக்கும் நியாயமான விலையில் தேங்காய்கள் கிடைக்கின்றன என்பதை உறுதி செய்துகொள்தல்
  • வீட்டில் தேங்காய்களைப் பயன்படுத்துகின்றபோது ஏற்படும் விரயத்தைத் தவிர்த்தல்.
  • தெங்குப் பொருள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் உற்பத்தித்திறனையும் போட்டித்தன்மையையும் மேம்படுத்துதல்
  • வர்த்தக உற்பத்திக்கும் விற்பனைக்கும் புதிய மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட தெங்கு உற்பத்தியை அபிவிருத்தி செய்து அறிமுகப்படுத்தல்.
  • தெங்கு சார்ந்த உற்பத்திகளைத் தொடர்ச்சியாக இற்ரைவரைப்படுத்தல் செய்தல் மற்றும் நவீனமயப்படுத்தல்.
  • தெங்கு சார்ந்த உற்பத்திகளின் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக மேலும் மேலும் பெறுமதியைக் கூட்டும் நடவடிக்கைகளை விருத்தி செய்தல்.
  • தகுந்த தரத்திலானதும் உணவுக்குப் பொருத்தமானதுமான தரத்தில் கொப்பரா உற்பத்தி செய்வதற்கு தெங்கு ஆலைகளுக்கு தொழில்நுட்ப – பொருளாதார தகுதிகளைக் கொண்ட பொருத்தமான செயற்றிட்டங்களை முன்வைத்தல் மற்றும் அவற்றை மேம்படுத்துதல்.
  • சாப்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய தரத்திற்கேற்ப வெள்ளை தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தல்.
  • எண்ணெய் தயாரிப்பு அலகுகளில், சாப்பாட்டுக்கு எடுக்கும் தேங்காய் எண்ணெய் பொதிசெய்து வைக்கும் பணிகளை மேம்படுத்துதல்.
  • உள்ளூர் சந்தைக்காகவும் ஏற்றுமதிக்காகவும் பெறுமதி கூட்டப்பட்ட தேங்காய்சதை உற்பத்தியையும் சாறு உற்பத்தியையும் மேம்படுத்துதல்.
  • தெங்கு உற்பத்திகளைத் தயாரிக்கின்றபோதும் ஏற்றுமதி செய்கின்றபோதும் தரம் பேணப்படுவதை உறுதி செய்துகொள்தல்.
  • ஏற்றுமதிக்கும் வீட்டுப் பயன்பாட்டுக்குமான தெங்கு உற்பத்திகளின் தரத்தை சான்றுப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்திக்கொள்தல்.
  • தெங்கு உற்பத்திக்காக ஆகக்கூடிய ஏற்றுமதி விலைகளைப் பெற்றுக் கொள்தல்.
  • விரிவான உற்பத்தி – சந்தை பலவகைத்தன்மையைப் பெற்றுக்கொள்தல்
  • தெங்கு உற்பத்தி ஏற்றுமதியின் போது அதற்கான நுகர்வோர் திருப்தி கிடைக்கின்றது என்பதை உறுதி செய்துகொள்தல்
  • தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளை கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்
  • சுழற்சி செய்யப்பட்ட காபன் கைத்தொழில் பணிகளை கண்காணித்தல் மற்றம் நிர்வகித்தல்.
  • பன்முகப்படுத்தப்பட்ட சந்தைப்படுத்தல் நிலையங்களிலும் இந்நாட்டு நுகர்வோருக்கும் சலுகை விலையில் தெங்கு உற்பத்திகளை வழங்குதல்.
  • நாடளாவியரீதியில் தெங்கு கைத்தொழிலைப் பாதுகாத்துக்கொள்வதை உறுதி செய்துகொள்ளக்கூடியவகையில் தெங்கு முக்கோணத்திலும் சிறிய முக்கோணத்திலும் பிரதேச அலுவலகங்களை அமைத்தல்.